Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாகையில் குறை தீர் கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள்

நாகையில் குறை தீர் கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள்

By: Nagaraj Wed, 30 Aug 2023 5:58:49 PM

நாகையில் குறை தீர் கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள்

நாகப்பட்டினம்: விவசாயிகள் புறக்கணிப்பு... குறுவை சாகுபடி பார்வையிடாத தமிழக முதலமைச்சரை கண்டித்து விவசாயிகள் கருப்பு கொடி காட்டி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை, திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

district collector,condemnation,farmers,neglect. crops ,மாவட்ட ஆட்சியர், கண்டனம், விவசாயிகள், புறக்கணிப்பு. குறுவைப்பயிர்

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள ஆய்வில் முதலைமைச்சர் திட்டத்தின் கீழ் இரண்டு நாள் சுற்றுப் பயணம. மேற்கொண்ட முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களை பார்வையிடாமலும், விவசாயிகளை சந்திக்காமல் சென்றதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கர்நாடகத்தில் உரிய நீரை பெற்று தர வேண்டும் வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்பு நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கறுப்பு கொடி ஏந்தி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்சிடம் மனு அளித்தனர்.

Tags :