Advertisement

ஊக்கத்தொகைக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Mon, 16 Oct 2023 4:01:56 PM

ஊக்கத்தொகைக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் சார்பில் ரூ.3லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வேளாண்மை துறையின் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது, உழவன் செயலியின் மூலமாகவே விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

farmers,incentives ,விவசாயிகள் ,ஊக்கத்தொகை

அதாவது, ஊக்கத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியின் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதையடுத்து குறைந்தது 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்கும் விவசாயிகள் இந்த ஊக்கதொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்கும் விவசாயிகளுக்கு விதைகள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதை உறுதி செய்த பின்னர் ரூ.3லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :