Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தக்காளி விநியோகம் செய்ய .. அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தக்காளி விநியோகம் செய்ய .. அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

By: vaithegi Mon, 25 Sept 2023 11:07:02 AM

ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தக்காளி விநியோகம் செய்ய   .. அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

சென்னை: ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி பயிர் சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இங்கு நிலவும் தட்ப வெப்ப நிலை மற்றும் மண் வளம் காய்கறி சாகுபடிக்கு பெரிதும் கை கொடுத்து வருகிறது. மேலும், ஓசூர் காய்கறி சந்தை மூலம் சந்தை வாய்ப்பும் விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது.

அதிலும் குறிப்பாக, இங்கு அறுவடையாகும் தக்காளி தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் தினசரி விற்பனைக்குச் செல்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால், சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.200 வரை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்தது.

farmers,ration shops ,விவசாயிகள் ,ரேஷன் கடைகள்


இதையடுத்து, ஓசூர் பகுதி விவசாயிகளிடையே தக்காளி சாகுபடியை ஊக்கப்படுத்தும் விதமாக தோட்டக்கலைத் துறை மூலம் தக்காளி நாற்றுகள் இலவசமாக வழங்கி தக்காளி சாகுபடி பரப்பை அதிகரித்தனர். இதற்கு இடையே, புதிய நடவு தோட்டங்களில் தற்போது தக்காளி அறுவடைக்கு வரத் தொடங்கி உள்ளது. மேலும், கடந்த காலங்களை விட 85 சதவீதம் மகசூல் அதிகரித்துள்ளது.

இதனால், சந்தைக்கு தக்காளி வரத்து உயர்ந்து விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.12-க்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.6 முதல் ரூ.8-க்கு விற்பனையானது. அதே நேரம் விவசாயிகளிடம் கிலோ ரூ.3-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும், விலை உயரும் போது ரேஷன் கடைகள் மூலம் தக்காளியை மலிவு விலைக்கு விற்பனை செய்வதைப்போல, மகசூல் அதிகரிக்கும் போது, விவசாயிகளை காக்க விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நிரந்தர விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் அரசுக்கு விடுத்துள்ளனர்.

Tags :