Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெட்டுக்கிளிகள் பற்றி விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்; நீலகிரி கலெக்டர் அறிவிப்பு

வெட்டுக்கிளிகள் பற்றி விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்; நீலகிரி கலெக்டர் அறிவிப்பு

By: Nagaraj Thu, 28 May 2020 7:56:40 PM

வெட்டுக்கிளிகள் பற்றி விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்; நீலகிரி கலெக்டர் அறிவிப்பு

வெட்டுக்கிளிகள் பற்றி விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஊட்டியில் வெட்டுக்கிளிகள் காணப்பட்டதாக விவசாயிகள் புகார் கூறிய நிலையில், வெட்டுக்கிளிகள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக வேளாண் பல்கலையில் இருந்து விரைவில் குழு ஊட்டி வர உள்ளனர்.

இதனால், விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் என நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.


farmers,locust,collector,nilgiris district ,விவசாயிகள், வெட்டுக்கிளி, கலெக்டர், நீலகிரி மாவட்டம்

ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு இந்திய மாநிலங்கள் சிலவற்றிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை தெரிவித்து இருந்தது. இருப்பினும் விவசாயிகள் கவலையில் இருந்து வருகினற்னர்.

இந்நிலையில், கேரளா மாநிலம் வயநாடு பகுதி வழியாக வந்ம வெட்டுக்கிளி ஊட்டியில் காணப்பட்டது. அதை பாட்டிலில் அடைத்து ஒருவர் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் தகவல் தெரிவித்தார்.

farmers,locust,collector,nilgiris district ,விவசாயிகள், வெட்டுக்கிளி, கலெக்டர், நீலகிரி மாவட்டம்

இதை அடுத்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியுள்ளார். தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

நீலகிரி எல்லையில் உள்ள கேரள பகுதியில், வெட்டுக்கிளிகளால் பாதிப்பு உள்ளது என தகவல் வந்துள்ளது. ஊட்டியிலும் சில இடங்களில் வெட்டுக்கிளி வந்தது என தகவல் கூறினர். அந்த பகுதியில் வந்த வெட்டுக்கிளியையும் பிடித்து கொடுத்தனர்.

அவை, ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்த வெட்டுக்கிளியா என ஆய்வு செய்யப்படும். நீலகிரியில், வெட்டுக்கிளிகளால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக வேளாண் பல்கலைக்குழு விரைவில் தமிழகம் வருகிறது. இதனால் விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை. ஆய்வு முடிந்த பிறகு தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|