Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.1.13 ஆயிரம் கோடி பலன் கிடைத்துள்ளது - பிரதமர் மோடி

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.1.13 ஆயிரம் கோடி பலன் கிடைத்துள்ளது - பிரதமர் மோடி

By: Karunakaran Mon, 21 Sept 2020 6:48:30 PM

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.1.13 ஆயிரம் கோடி பலன் கிடைத்துள்ளது - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கான அடிக்கல் விழாவை இன்று காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பீகார் முதல் மந்திரி நிதீஷ்குமார் கலந்து கொண்டார். அதன்பின் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட 2 வேளாண் மசோதாக்கள் குறித்து பேசினார்.

பிரதமர் மோடி உரையாற்றுகையில், விவசாயிகளை நான் பாராட்டுகிறேன். வேளாண் பிரிவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தற்பொழுது தேவையானது. விவசாயிகளுக்காக எங்களுடைய அரசு இந்த சீர்திருத்தத்தினை கொண்டு வந்துள்ளது. வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் சிலர் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று கூறினார்.

farmers,minimum support price scheme,pm modi,wheat ,விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம், பிரதமர் மோடி, கோதுமை

மேலும் அவர், குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கை முன்பிருந்தது போல் நிச்சயம் தொடரும் என விவசாயிகளுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த மசோதாக்கள், வேளாண் விளைபொருட்களை சுதந்திரமுடன் எங்கேயும் விற்பனை செய்து கொள்ளும் அதிகாரத்தினை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளன. இதேபோன்று, இந்த மசோதாக்கள் வேளாண் கடைகளுக்கு எதிரானது அல்ல என்றும் தெளிவுப்படுத்தி கொள்ள நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காலத்தில், ரபி பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து ரூ.1.13 ஆயிரம் கோடி மதிப்பிலான கோதுமை குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. சாதனை அளவான இந்த தொகையானது கடந்த ஆண்டை விட 30% அதிகம் ஆகும் என்று தெரிவித்தார்.

Tags :