Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இந்த தேதி

புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இந்த தேதி

By: vaithegi Thu, 23 Feb 2023 10:13:14 AM

புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இந்த தேதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெறும் என ஆட்சியர் தகவல் .... இதனை அடுத்து இது குறித்து ஆட்சியர் கவிதா ராமுஅவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்ரவரி 2023-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெவுள்ளது.

இதையடுத்து இதில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இந்த க்கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக ஆட்சியர் தெரிவிததுள்ளார்.

Tags :
|