Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

By: Monisha Sat, 26 Dec 2020 12:30:38 PM

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 147 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை மற்றும் சம்பா பருவத்திற்கு 1,757 மெட்ரிக் டன் நெல் விதைகள் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் விதை நெல், உரம் போன்றவை அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் கரும்பு, தென்னை, எண்ணெய்பனை போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர்பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகள் 4,560 எக்டேர் பரப்பிற்கு ரூ.18 கோடியே 69 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டு பருவத்தில் நெற்பயிருக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 969 விவசாயிகள் 3 லட்சத்து 26 ஆயிரத்து 819 ஏக்கர் பரப்பில் காப்பீடு செய்துள்ளனர். மேலும் 2019-20-ம் ஆண்டு காரீப் பருவத்திற்கு 6,851 விவசாயிகளுக்கு ரூ.6 கோடியே 6 லட்சத்து 80 ஆயிரம் பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

farmers,shortage,meeting,irrigation scheme,crop insurance ,விவசாயிகள்,குறை,கூட்டம்,பாசன திட்டம்,பயிர் காப்பீடு

2019-200-ம் ஆண்டில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 498 விவசாயிகளுக்கு ரூ.74 கோடியே 63 லட்சத்து 50 ஆயிரம் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு, வங்கிகள் மூலம் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. வங்கி கணக்கு விவரம் தவறுதலாக உள்ள நபர்களுக்கு தற்சமயம் சரியான வங்கி கணக்கு விவரம் பெறப்பட்டு, பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை மூலம் நடப்பாண்டு பயிர்க்கடன் ரூ.297.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின் மூலம் குறுவை பட்டம் தொடங்கிய நிலையில் 300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தற்போது 61 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் விரைவு(தட்கல்) விவசாய மின் இணைப்பு வழங்கல் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 1366 விண்ணப்பதாரர்களில் 915 நபர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண்மை துறை இணை இயக்குனர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், காவிரி கோட்ட செயற்பொறியாளர், கல்லணைக்கால்வாய் கோட்ட செயற்பொறியாளர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :