Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் விவசாயிகள் ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக மண் எடுத்து கொள்ளலாம்

தமிழகத்தில் விவசாயிகள் ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக மண் எடுத்து கொள்ளலாம்

By: vaithegi Sat, 09 July 2022 5:52:58 PM

தமிழகத்தில் விவசாயிகள் ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக மண் எடுத்து கொள்ளலாம்

தமிழகம்: தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது, ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்து இருக்கும் வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்படுத்துவதற்கான பல நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்து பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து நஞ்சை பயன்பாட்டிற்காக ஹெக்டேருக்கு 185 கனமீட்டர் வண்டல் மண்ணையும், புஞ்சை ஹெக்டேருக்கு 222 கனமீட்டர் வண்டல் மண்ணையும் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை விவசாயிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

soil,farmers ,மண் ,விவசாயிகள்

இப்போது, அரசின் அறிவுறுத்தலின் கீழ், ஏரிகள் அல்லது குளங்களில் வண்டல் மண் எடுக்க சம்பந்தப்பட்ட வேளாண் நிலங்களுக்கான சிட்டா 10 (1) அல்லது அடங்கல் நகலுடன் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, இந்த அறிவிப்பானது சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் வண்டல் மண்களை 20 நாட்களுக்கு மிகாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது விவசாயிகள் மத்தியில் இருந்து பெரும் வரவேற்புகளை பெற்று வருகிறது.

Tags :
|