Advertisement

வெங்காயத் தகனம் செய்த மகாராஷ்டிரா விவசாயிகள்

By: Nagaraj Wed, 08 Mar 2023 7:51:17 PM

வெங்காயத் தகனம் செய்த மகாராஷ்டிரா விவசாயிகள்

மகாராஷ்டிரா: விலை வீழ்ச்சியடைந்து வருவதால் மகாராஷ்டிர விவசாயிகள் ஹோலிகா தகனத்திற்குப் பதிலாக வெங்காய தகனம் நடத்தி அரசுக்குத் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், அரசுக்கு எதிராக விவசாயிகள் வெங்காயத்தை நெருப்பில் இட்டு போராட்டம் நடத்தினர். அதனால் இந்த வருடம் மகாராஷ்டிர விவசாயிகள் ஹோலிகா தகனத்திற்குப் பதிலாக வெங்காய தகனம் நடத்தி அரசுக்குத் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால் வேதனையடைந்த மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் விவசாயி ஒருவர், அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் அவல நிலையை எடுத்துரைக்கும் வகையிலும் வெங்காய செடிகளுக்கு நெருப்பு மூட்டினார்.

மகாராஷ்டிராவில் ஹோலிகா பண்டிகையை முன்னிட்டு நெருப்பை எரித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான நாசிக்கில் உள்ள லாசல்கானில் உள்ள விவசாய உற்பத்தி சந்தைக் குழுவில் (ஏபிஎம்சி) சமையலறை மூலப்பொருட்களின் விலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் வெங்காய விவசாயிகள் நெருக்கடியுடன் போராடி வருகின்றனர்.

policies,crime,onions,low prices,farmers ,கொள்கைகள், குற்றம், வெங்காயம், விலை குறைவு, விவசாயிகள்

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.2 முதல் ரூ.4 வரை குறைந்ததால், விவசாயிகள் கொதிப்படைந்து கடந்த வாரம் ஏபிஎம்சியில் ஒரு நாள் ஏலத்தை நிறுத்தினர்.

யோலா தாலுகாவில் உள்ள மாதுல்தான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணா டோங்ரே, தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயப் பயிரைக் தீயிட்டுக் கருக்கியதுடன், அந்த வெங்காய தகன போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சகலருக்கும் அழைப்பிதழ் அனுப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

“மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை அவர்களின் தலைவிதிக்கு விட்டுவிட்டன.அவர்களின் அதிகாரப் போராட்டத்தில், விவசாயி பிழைக்கிறாரா, சாகிறாரா என்பதில் அரசு கவனம் செலுத்துவதில்லை. இது மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தேசத்துக்கே ஒரு கறுப்பு நாள் தான். ஏனெனில், ஒரு விவசாயிக்கு தான் பாடுபட்டு விளைவித்த வெங்காயத்தை தன் கையாலேயே கொளுத்த வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டதே, அதனால் தான் என்றவர் அரசாங்கத்தின் கொள்கைகளை ஒட்டுமொத்தமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags :
|
|