Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உறைபனி அதிகரிப்பால் தேயிலையை முன்கூட்டியே அறுவடை செய்யும் விவசாயிகள்

உறைபனி அதிகரிப்பால் தேயிலையை முன்கூட்டியே அறுவடை செய்யும் விவசாயிகள்

By: Nagaraj Thu, 26 Nov 2020 9:01:59 PM

உறைபனி அதிகரிப்பால் தேயிலையை முன்கூட்டியே அறுவடை செய்யும் விவசாயிகள்

தேயிலை முன்கூட்டியே அறுவடை... நீலகிரியில், உறைபனி அதிகரித்து தேயிலை கருகி வருவதால், சிறு விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், தேயிலை பிரதான தொழிலாக உள்ளது. நடப்பாண்டு பரவலாக பெய்த மழையால், தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக, ஊட்டி, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உறைபனி தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தேயிலை கருகி வருகிறது.

farmers,tea plants,palm oil,kotagiri malar ,விவசாயிகள், தேயிலை செடிகள், பனை ஓலை, கோத்தகிரி மலார்

விவசாயிகள் அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர்.மாவட்டத்தில் உள்ள, 16 கூட்டுறவு தொழிற்சாலைகளில், வறட்சியான காலநிலையிலும் சராசரியாக நாளொன்றுக்கு, 20 ஆயிரம் கிலோ இலை கொள்முதல் செய்யப்படுகிறது.

தேயிலை செடிகளை பனியில் இருந்து பாதுகாத்து கொள்ள, பனை ஓலை மற்றும் 'கோத்தகிரி மலார்' என்ற செடிகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

Tags :