Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சேலம்-சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் போராட்டம்

சேலம்-சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் போராட்டம்

By: Monisha Wed, 09 Dec 2020 12:11:27 PM

சேலம்-சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் போராட்டம்

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களில் விவசாய நிலங்களை மாநில அரசு கையகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. அதில் சேலம்-சென்னை, எட்டு வழிச்சாலை திட்டத்தை மறுவரையறை செய்து, செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அரசு நிலமாக மாற்ற தடை விதித்ததை விவசாயிகள் கொண்டாடினர். அதேவேளையில் மீண்டும் நிலம் எடுக்க புதிய அறிவிப்பாணை வெளியிட மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என கூறியிருப்பதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். உச்சநீதிமன்ற தீர்ப்பு தற்காலிக மகிழ்ச்சி மட்டுமே வழங்கி உள்ளது. திட்டத்தை முழுமையாக ரத்து செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது.

eight lane,project,case,judgment,struggle ,எட்டுவழிச்சாலை,திட்டம்,வழக்கு,தீர்ப்பு,போராட்டம்

மேலும் திட்டத்தை செயல்படுத்த மறைமுக ஆதரவளிப்பது போல மீண்டும் அறிவிப்பாணை வெளியிட்டு முறைப்படி நிலத்தை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இதற்கு முன் நடத்திய போராட்டங்களை விட அதி தீவிரமாக எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டங்களை முன் எடுக்க வேண்டும். சேலம்-சென்னை இடையே ஏற்கனவே மூன்று சாலைகள் உள்ள நிலையில் இந்த திட்டம் வேண்டாமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அதனால் மத்திய, மாநில அரசுகள் சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்தக் கூடாது. அதை முழுமையாக கைவிட வேண்டும்.

விவசாயிகளின் நலன்கருதி நீதிமன்றமும் இதில் தலையிடவேண்டும். விளை நிலங்களை ஒருபோதும் நாங்கள் கொடுக்க மாட்டோம். கனிமவள கொள்ளைக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காகவும் இந்த சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சித்தால் இன்னும் அதிக முனைப்போடு போராட்டத்தை முன்னெடுப்போம். இதையெல்லாம் வலியுறுத்தி திட்டத்தை முழுமையாக கைவிடும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்து அறிவித்தனர். மேலும் விரைவில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், தொடர் போராட்டத்திற்கும், சட்ட போராட்டத்திற்கும் தயாராக உள்ளதாகவும் விவசாயிகள் கூறி உள்ளனர். இதனால் இனிவரும் நாட்களில் போராட்டம் தீவிரமடையும் என கூறப்படுகிறது.

Tags :
|