Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக- கேரளா எல்லை வனப்பகுதியில் 2ம் நாளாக விவசாயிகள் போராட்டம்

தமிழக- கேரளா எல்லை வனப்பகுதியில் 2ம் நாளாக விவசாயிகள் போராட்டம்

By: Nagaraj Mon, 03 July 2023 10:30:23 PM

தமிழக- கேரளா எல்லை வனப்பகுதியில் 2ம் நாளாக விவசாயிகள் போராட்டம்

குமுளி: விவசாயிகள் போராட்டம்... குமுளி மலைச்சாலை அருகே தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் 2 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், தமிழக - கேரள எல்லையில் கூடலூர் நகராட்சிபகுதியில் உள்ளது அமராவதி, ஆசாரி பள்ளம் பகுதிகள். இங்கு விவசாயம் செய்து வந்த விவசாயிகளை வனத்துறையினர் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியேற்றினர்.

70 ஆண்டுகாலமாக விவசாயம் செய்த எங்களை வெளியேற்றக் கூடாது என்று வன உரிமைக்குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் சுரேந்திரன் மூலம் வழக்கு தொடர்ந்து, விவசாயம் செய்யலாம் என இடைக்கால உத்தரவை பெற்றனர்.

farmers,protest,kerala,cooked food,stayed ,விவசாயிகள், போராட்டம், கேரளா, உணவு சமைத்தனர், தங்கினர்

அதன் பேரில் ஞாயிற்றுக்கிழமை வனப்பகுதிக்கு சென்ற 21 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் கொண்ட விவசாயிகள் அங்கு டெண்ட் அமைத்து தங்கினர். அவர்கள் அங்கு தங்கக்கூடாது என வனத்துறையினர் தடுத்தனர்.

நீதிமன்ற உத்தரவு உள்ளது எனக் கூறி இரவு அங்கு உணவு சமைத்து தங்கினர். இரண்டாவது நாளாக இன்றும் தங்கியுள்ளனர்.

Tags :
|