Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

By: Nagaraj Fri, 02 Oct 2020 10:25:04 AM

கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

இன்று நடக்க இருந்த கிராம சபைக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர.

காந்தி ஜெயந்தியையொட்டி அக்டோபர் 2ஆம் தேதி நாடு தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு அரசியல் கட்சியினர், ஊராட்சி அளவிலான அதிகாரிகள், மக்கள் தயாராகி வந்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி அக்டோபர் 2ம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படவேண்டும்.

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது. கூட்டத்தை பொது வெளியிலோ அல்லது காற்றோட்டமான இடத்திலோ நடத்தலாம். கூட்டத்துக்கு முன்பாக முழுமையாக அது நடைபெறும் இடத்தை தூய்மை செய்து, கிருமி நாசினி பொருள்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

village council,cancellation,notice,farmers protest,resolution ,கிராம சபை, ரத்து, அறிவிப்பு, விவசாயிகள் எதிர்ப்பு, தீர்மானம்

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் சில மாவட்ட ஆட்சியர்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு தடை விதித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளில் நாளை நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதேபோல், பெரம்பலூர், திருப்பூரில், நெல்லை, கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்தந்த ஆட்சியர்கள் அறிவித்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிராம சபை கூட்டங்களில் வேளாண் சட்டத்திற்கு எதிராகவும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கும் வகையிலும் தீர்மானம் நிறைவேற்ற தமிழகம் முழுவதும் விவசாயிகள் திட்டமிட்டதால் கூட்டத்தை அரசு ரத்து செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags :
|