Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போராட்டக்களத்தில் டிராக்டர்களையே கூடாரமாக்கி குளிரை பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகள்

போராட்டக்களத்தில் டிராக்டர்களையே கூடாரமாக்கி குளிரை பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகள்

By: Karunakaran Fri, 18 Dec 2020 3:34:11 PM

போராட்டக்களத்தில் டிராக்டர்களையே கூடாரமாக்கி குளிரை பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 23-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. டெல்லி நகருக்கு வரும் 3 முக்கிய சாலைகளை அவர்கள் முற்றுகையிட்டு அங்கேயே முகாமிட்டு தங்கி இருகிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

22 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. புதிது புதிதாக விவசாயிகள் போராட்ட களத்துக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். தற்போது பெண்களும் அதிக அளவில் போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். வடமாநிலங்களில் கடும் குளிர் வீசி வருகிறது. குறிப்பாக டெல்லியிலும் குளிர் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.

farmers,tent tractors,battlefield,cold ,விவசாயிகள், கூடார டிராக்டர்கள், போராட்டக்களம், குளிர்

ஆனாலும் குளிரை பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்கிறார்கள். அவர்கள் தற்காலிகமாக கூடாரங் களை அமைத்து உள்ளனர். தாங்கள் கொண்டு வந்த டிராக்டர்களையே சிறிய வீடு போல் மாற்றி, அதையும் கூடாரமாக்கி இருக்கிறார்கள். அங்கேயே குளிரை பொருட்படுத்தாமல் தங்கி உள்ளனர். மத்திய அரசு பல வேண்டுகோள் விடுத்தும் அதை ஏற்க மறுக்கின்றனர்.

3 சட்டங்களையும் வாபஸ் பெறும்வரை போராட் டத்தை கைவிடமாட்டோம் என்று சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர். விவசாயிகளிடம் பிரதமர் மோடி பேசி, சட்டங்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags :