Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கும் கர்நாடகா : கடும் குற்றச்சாட்டு

செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கும் கர்நாடகா : கடும் குற்றச்சாட்டு

By: Nagaraj Tue, 10 Oct 2023 07:05:18 AM

செயற்கை தட்டுப்பாட்டை  உருவாக்கும் கர்நாடகா : கடும் குற்றச்சாட்டு

சென்னை: கர்நாடக அரசு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதாக தமிழக சட்டப்பேரவை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று அக்டோபர் 9ம் தேதி கூடியது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது இதுவரை காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்க கூடிய நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேலும் கர்நாடக அரசு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதாக குற்றம் சாட்டினார்.

காவிரி விவகாரம் தொடர்பான தனி தீர்மானம் குறித்து, முதல்வர் பேசியதாவது, திமுக அரசு ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி காவிரி நீரை தமிழ்நாடுக்கு கொண்டுவர தொடர்ந்து போராடி வருகிறது. நடப்பு ஆண்டில் 9. 19 டி எம் சி தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டிய நிலையில், வெறும் 2.18 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்து உள்ளது.

farmers unions,chief minister,protest,karnataka,legislative assembly ,விவசாய சங்கங்கள், முதல்வர், போராட்டம், கர்நாடகா, சட்டப்பேரவை

இதனால் தமிழ்நாட்டின் விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல், விளைப் பயிர்கள் கருகி உள்ளன. குறுவை பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில், சம்பா சாகுபடியையாவது காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கர்நாடகா அரசு திட்டமிட்டு செயற்கையான நெருக்கடியை காவேரி நீர் விவகாரத்தில் உருவாக்கி வருகிறது. இது தொடர்பான பல்வேறு ஆதாரங்களுடன் தமிழ்நாடு அரசு ஜூலை 17ஆம் தேதி முதல் ஒன்றிய அரசை தொடர்பு கொண்டு வலியுறுத்தி வருகிறது .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் வரும் அக்டோபர் 11ம் தேதி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் இணைந்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :