Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 8ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுக்க முடிவு

வரும் 8ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுக்க முடிவு

By: Nagaraj Sat, 05 Dec 2020 09:19:29 AM

வரும் 8ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுக்க முடிவு

நாடு தழுவிய வேலை நிறுத்தம்... வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 8ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லிக்கு பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான பஞ்சாப் விவசாயிகள் கடும் இன்னலுக்கு பின் தலைநகருக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்களில் ஒரு பகுதியினர், டெல்லி போலீசார் ஒதுக்கிய புராரி பகுதியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் போராடி வருகின்றனர்.

அதே நேரம் டெல்லியின் எல்லைகளான சங்கு, திக்ரி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 8 நாட்களாக முகாமிட்டு, நெடுஞ்சாலைகளிலேயே போராட்டத்தை தொடர்கின்றனர். அவர்களை புராரி மைதானம் செல்லுமாறு மத்திய அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. மத்திய அரசுடனான பல சுற்று பேச்சுவார்த்தைகளும் முடிவு எட்டப்படாததால் போராட்டம் நீடித்து வருகிறது.

full blockade,struggle,peasants,negotiation,country ,முழு அடைப்பு, போராட்டம், விவசாயிகள், பேச்சுவார்த்தை, நாடு

இந்த நிலையில், வரும் 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பிற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுக்க முடிவெடுத்துள்ளன. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாத் கூறுகையில், “ மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு நாள் நாடு தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்” என்றார்.

மற்றொரு விவசாய சங்க தலைவரான ஹர்விந்தர் சிங் லடக்வால் கூறுகையில், டிசம்பர் 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடிவெடுத்துள்ளோம்” என்றார்.

Tags :