Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாலையை விட்டு வெளியேறி சாலையோரம் முகாமிட்டு போராட்டத்தை தொடரும் விவசாயிகள்

சாலையை விட்டு வெளியேறி சாலையோரம் முகாமிட்டு போராட்டத்தை தொடரும் விவசாயிகள்

By: Karunakaran Sun, 13 Dec 2020 3:48:18 PM

சாலையை விட்டு வெளியேறி சாலையோரம் முகாமிட்டு போராட்டத்தை தொடரும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியிலும், டெல்லி எல்லைப்புற சாலைகளிலும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 18-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், விவசாய சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

டெல்லியை இணைக்கும் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தையும் நடத்தினார்கள். இதனால் ஏராளமான டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் சென்றன. போராட்டம் ஒருபுறம் நடைபெறும் நிலையில், விவசாயிகளை சமாதானம் செய்யும் முயற்சியும் தொடர்ந்து நடைபெறுகிறது.

farmers,camp,roadside,struggle ,விவசாயிகள், முகாம், சாலையோரம், போராட்டம்

டெல்லி-நொய்டா நெடுஞ்சாலையில் உள்ள சில்லா எல்லையில், கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக (டிசம்பர் 1 முதல்) சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகளுடன் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நரேந்திர தோமர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியபோது பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், வாகன போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும் மத்திய மந்திரிகள் கேட்டுக்கொண்டனர்.

அதன்பின் சாலையை காலி செய்த விவசாயிகள், வாகன போக்குவரத்துக்கு அனுமதித்தனர். இதனால் இன்று காலை முதல், சில்லா எல்லை வழியாக டெல்லி-நொய்டா இடையே வழக்கமான வாகன போக்குவரத்து தொடங்கியது. சாலையை விட்டு வெளியேறிய விவசாயிகள் தொடந்து சாலையோரம் முகாமிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். விவசாயிகளின் அடுத்தகட்ட நகர்வு குறித்து இன்று மாலை தெரியவரும்.

Tags :
|