Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்த விவசாயிகள்

மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்த விவசாயிகள்

By: Karunakaran Tue, 01 Dec 2020 12:43:17 PM

மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்த விவசாயிகள்

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 6-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டபோது, போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின் நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

farmers,federal government,negotiations,struggle ,விவசாயிகள், மத்திய அரசு, பேச்சுவார்த்தைகள், போராட்டம்

இந்நிலையில், டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அழைப்பை விவசாயிகள் ஏற்கமறுத்தையடுத்து இன்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும். அதில் பங்கேற்குமாறு விவசாய குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.

தற்போது, மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரிப்பதாக விவசாய குழுக்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியின் இணை செயலாளர் சுக்விந்தர் சபரான் கூறுகையில், நாட்டில் மொத்தம் 500-க்கும் அதிகமான விவசாய குழுக்கள் உள்ளன. ஆனால், அரசு பேச்சுவார்த்தை நடத்த 32 விவசாய குழுக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து விவசாய குழுக்களையும் அழைக்கும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம் என்று கூறினார்.

Tags :