Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேகமாக புக்காகி வரும் தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு

வேகமாக புக்காகி வரும் தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு

By: vaithegi Mon, 30 Oct 2023 1:07:51 PM

வேகமாக புக்காகி வரும் தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு


சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவ.12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் வருகிற நவ.9 ஆம் தேதியிலிருந்தே சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இதனை அடுத்து இந்த சிறப்பு பேருந்துகளுக்கு முன் பதிவு செய்வதற்கு சென்னை கோயம்பேட்டில் 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்து உள்ளார்.

மேலும் இது போக ஆன்லைன் மூலமாகவும் https://www.tnstc.in/home.html என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.இதையடுத்து ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதால் சில மணி நேரத்திலேயே டிக்கெட்கள் அனைத்தும் புக் செய்ய வாய்ப்பிருக்கிறது.

எனவே, தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் தற்போதே புக் செய்து பயணத்தை உறுதி செய்துகொள்ளும்படி போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|