Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிய, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சென்னை மாணவர்கள்

ஆசிய, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சென்னை மாணவர்கள்

By: Nagaraj Fri, 11 Sept 2020 09:05:37 AM

ஆசிய, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சென்னை மாணவர்கள்

சாதித்து காட்டிய பள்ளி மாணவர்கள்... ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவர். அவர்களுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னையின் திருமழிசை பகுதியில் உள்ள சென்னை பப்ளிக் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார் கவீஷ் என்ற மாணவர். இந்த மாணவர், அறிவியல் குறித்த தனது பேச்சின் மூலம் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 3 வயதில் இருந்தே அறிவியல் மீது நாட்டம் கொண்ட கவீஷ், தினமும் சுமார் 4ல் இருந்து 5 மணி நேரம் வரை அறிவியல் தொடர்பான கட்டுரைகளை படித்து வந்துள்ளார்.

அறிவியலின் மிகவும் கடினமான பிரிவுகளான கருந்துளைகள் மற்றும் புவி ஈர்ப்பு குறித்த தனது சிறப்பான பேச்சால் ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

சென்னை பப்ளிக் பள்ளியை சேர்ந்த த்ரோனா என்ற மற்றொரு மாணவன் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அந்த மாணவனுக்கு தற்போது 4 வயதே ஆகிற நிலையில், 7 நிமிடங்களில் 200க்கும் அதிகமான விலங்கினங்களின் பெயர்களைக் கூறி சாதனை படைத்துள்ளார்.

students,achievement,parents,pride,chennai ,மாணவர்கள், சாதனை, பெற்றோர், பெருமிதம், சென்னை

அவரது பெற்றோர் வீட்டிலும் பலவகையான செல்லப் பிராணிகளை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். டிஸ்கவரி, அனிமல் பிளேனட் போன்ற சேனல்களையுமே த்ரோனா அதிகம் பார்த்ததால் விலங்கினங்களின் பெயர்களை அதிகமாக நினைவில் வைத்துள்ளார்.

த்ரோனாவின் இந்த திறமையை சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச்செய்யவேண்டும் என்று நினைத்த அவரது பெற்றோர் ஊரடங்கு காலத்தில் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து த்ரோனாவின் பெற்றோர் கூறியதாவது:

"த்ரோனா இந்த சாதனையை நிகழ்த்தியதால் மிகவும் பெருமையடைகிறோம். தற்போது இந்திய சாதனை புத்தகத்தின் எங்களது மகனின் பெயர் இடம்பெற்றுள்ளது. அடுத்தகட்ட முயற்சியாக ஆசிய சாதனைப் புத்தகத்தில் எங்களது மகனின் பெயர் இடம்பெற அதற்கான பயிற்சியில் த்ரோனாவை ஈடுபடுத்துவோம். அதிகபட்சமாக 3 நாட்கள்தான் இந்த சாதனைக்காக த்ரோனா பயிற்சி செய்தார்" என்று பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.

Tags :
|