Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்னாள் அதிபர் டிரம்ப் பண்ணை இல்லத்தில் எப்.பி.ஐ., அதிரடி சோதனை

முன்னாள் அதிபர் டிரம்ப் பண்ணை இல்லத்தில் எப்.பி.ஐ., அதிரடி சோதனை

By: Nagaraj Wed, 10 Aug 2022 07:44:42 AM

முன்னாள் அதிபர் டிரம்ப் பண்ணை இல்லத்தில்  எப்.பி.ஐ., அதிரடி சோதனை

அமெரிக்கா: அதிரடி சோதனை... அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பண்ணை இல்லத்தில் அந்த நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.

அதிபா் மாளிகையிலிருந்து அவா் வெளியேறும்போது, தன்னுடன் ரகசிய அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளாரா என்பதைக் கண்டறிவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஃபுளோரிடா மாகாணம், பாம் பீச்சிலுள்ள எனது அழகான மாா்-ஏ-லாகோ இல்லம், ஏராளமான எஃப்.பி.ஐ. அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டு, சோதனையிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரு முன்னாள் அதிபருக்கு இதுபோன்ற அநீதி இழைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.அரசு ஆவணங்கள் விவகாரத்தில் உரிய அதிகாரிகளுக்கு ஏற்கெனவே முழு ஒத்துழைப்பு அளித்தேன். அதற்குப் பிறகும் முன்னறிவிப்பின்றி எனது இல்லத்தில் சோதனை மேற்கொள்வது தேவையற்றதும் முறையற்றதும் ஆகும்.

former president,trump,action,search,treasury order ,
முன்னாள் அதிபர், ட்ரம்ப், அதிரடி, சோதனை, பெட்டகம் உத்தரவு

தோற்றுப்போன, மூன்றாம் உலக நாடுகளில்தான் அரசு இயந்திரம் அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஏவப்படும். தற்போது அமெரிக்காவும் அந்த நாடுகளில் ஒன்றாகியிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.


தீவிர வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட ஜனநாயகக் கட்சியினா், வரும் 2024-ஆம் ஆண்டு அதிபா் தோதலில் நான் மீண்டும் போட்டியிடுவதை விரும்பவில்லை. அதனை தடுத்து நிறுத்துவதற்காகவே இந்த அதிரடி சோதனைக்கு உத்தரவிட்டுள்ளனா். அவா்கள் எனது பாதுகாப்புப் பெட்டகத்தைக் கூட விடாமல் உடைத்துப் பாா்த்துள்ளனா். அமெரிக்காவின் 45-ஆவது அதிபருக்கே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.


எனினும், அவருடைய பாம் பீச் பண்ணை வீட்டில் மேலும் சில ரகசிய ஆவணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் எஃப்.பி.ஐ தற்போது அதிரடி சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Tags :
|
|
|