Advertisement

கொரோனா பாதிப்பு உயர்வதால் மக்கள் மத்தியில் அச்சம்

By: Nagaraj Thu, 20 Apr 2023 3:35:38 PM

கொரோனா பாதிப்பு உயர்வதால் மக்கள் மத்தியில் அச்சம்

புதுடில்லி: இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,633 ஆக குறைந்திருந்த கொரோனா தொற்று இன்று 10,542 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே கொண்டே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,633 ஆக குறைந்திருந்த கொரோனா தொற்று இன்று 10,542 ஆக உயர்ந்துள்ளது.

corona,india,death ,கொரோனா  ,இந்தியா,உயிரிழப்பு, சுகாதாரத்துறை, அமைச்சகம், தடுப்பூசி

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 61,233 லிருந்து 63,562 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், பலி எண்ணிக்கை 5,31,152 லிருந்து 5,31,190 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,42,42,474 லிருந்து 4,42,50,649 ஆக உயர்ந்துள்ளது.

இதனை அடுத்து நாடு முழுவதும் இதுவரை மட்டும் 220,66,27,758 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 487 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|
|