Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பயந்தது நடந்து விட்டது... கேரளாவில் அதிகரிக்குது கொரோனா

பயந்தது நடந்து விட்டது... கேரளாவில் அதிகரிக்குது கொரோனா

By: Nagaraj Fri, 15 May 2020 11:27:06 AM

பயந்தது நடந்து விட்டது... கேரளாவில் அதிகரிக்குது கொரோனா

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அழைத்து வரும் போது, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பின்பே அவர்களை அழைத்து வர வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் பேராபத்து ஏற்பட்டு விடும் என்று கேரளா முதல்வர் பயந்தது நடந்தே விட்டது.

கேரளாவில் அதிகரித்தது கொரோனா பாதிப்பு... கேரளாவில் மார்ச் இறுதிக்கு பிறகு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, நேற்று ஒரே நாளில் மட்டும் 26 ஆக அதிகரித்துள்ளது.

emphasis,kerala cm,corona,increase ,வலியுறுத்தல், கேரளா முதல்வர், கொரோனா, அதிகரிப்பு

கேரளாவில் இதுவரை 560 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்களில் 64 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்தொற்றையும், உயிரிழப்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கேரளாவில் நேற்று ஒரே நாளில் 26 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 7 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பியவர்கள். இதுவரை அவ்வாறு கேரளா திரும்பிய 22 பேருக்கு கொரோனா உள்ளது.

வரும் நாட்களில் அதிக விமானங்கள் எதிர்பார்க்கப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்கின்றனர். தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸை தவிர பிற அரபு நாடுகளிலிருந்து இந்தியா அனுப்பப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யவில்லை.

emphasis,kerala cm,corona,increase ,வலியுறுத்தல், கேரளா முதல்வர், கொரோனா, அதிகரிப்பு

சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அழைத்து வரும் போது, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பின்பே அவர்களை அழைத்து வர வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் பேராபத்து ஏற்பட்டு விடும் என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன் "இது மாநிலத்திற்கு ஒரு முக்கியமான கட்டம். கடந்த சில நாட்களில், இங்கு வைரஸ் தொற்று ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருந்தது, சில நாட்கள் அதுவும் இல்லை. திடீரென வேகமெடுத்திருப்பது மறைந்துள்ள அச்சத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவே கடுமையான நெறிமுறையை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு பாஸ் வழங்குமாறு நாங்கள் வற்புறுத்தியபோது பலர் எங்களை கேள்வி எழுப்பினர். அரசியல் செய்யும் நேரம் இல்லை. இதிலிருந்து மீண்டு வருவோம் என உறுதியாக கூறுகிறேன்." என்றார்.

Tags :
|