Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவும் அச்சம்: தாராவியிலிருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவும் அச்சம்: தாராவியிலிருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Fri, 22 May 2020 4:49:38 PM

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவும் அச்சம்: தாராவியிலிருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலம், மும்பை தாராவியில் 8 லட்சம் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்களாக உள்ளனர். தாராவியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், பொது முடக்கம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதனால் தொழில் வேலை வாய்ப்புகள் அனைத்தையும் இழந்துள்ள தமிழர்கள் வாழ்வாதாராம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு, குணமடைந்தோரின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதால், தமிழர்களிடையே மிகுந்த அச்சம் காணப்படுகிறது. இதனால் அவர்கள் தமிழகத்துக்கு திரும்ப ஆர்வமாக இருக்கிறார்கள்.

இதுவரை 10 ஆயிரம் தமிழர்கள் தனியார் பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். மேலும், புனே, மும்பையிலிருந்து 2 ரெயில்கள் மூலம் 2,800 தமிழர்கள் தூத்துக்ககுடி, திருநெல்வேலி, ஈரோடு, தென்காசி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.

maharashtra state,dharavi,coronavirus,tamil nadu,fear of transmission of corona ,மகாராஷ்டிர மாநிலம்,தாராவி,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,மீண்டும் கொரோனா பரவும் அச்சம்

மும்பை தாராவியிலிருந்து தமிழகம் திரும்பியவர்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

வெளி மாநிலத்தைச் சேர்ந்த தமிழர்கள் தமிழகம் திரும்புவதற்கு உதவியாக தமிழக அரசு சமீபத்தில் இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதில் மும்பையிலிருந்து தமிழகம் திரும்ப 1,500 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மும்பை தாராவியை சேர்ந்தவர்கள். இவர்களும் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளனர்.

Tags :