Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்ஸ் அப் ... பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

வாட்ஸ் அப் ... பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

By: vaithegi Thu, 10 Nov 2022 4:01:27 PM

வாட்ஸ் அப்  ...  பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

இந்தியா: வாட்ஸ் அப் செயலியின் அப்டேட்கள் பற்றி அறிவிப்புகள் தினசரி ஏதேனும் ஒன்று வெளியாகி கொண்டே இருக்கிறது. அதன்படி இன்றைய அறிவிப்பில் முக்கியமாக பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் பீட்டா பயனர்களுக்கு மட்டும் முன்னதாக வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர உள்ளது.

அந்த வகையில், பயனர்கள் தங்களுக்கு தானாகவே செய்திகளை அனுப்பி கொள்ளும் வகையில், “message to yourself” என்ற புதிய வசதி வந்துள்ளது. முன்னதாகவும் இது போல் செய்ய முடியும் என்ற போதிலும், கான்டாக்ட்டில் yourself என்ற தனி குறியீடு இருக்காது.

whatsapp features ,வாட்ஸ் அப் ,அம்சங்கள்

ஆனால், இனி இதற்கான தனி Option இருக்கும். அதேபோல், தற்போது குரூப் சாட்டில் இருந்து அளவிற்கு அதிகமாக வரும் செய்திகளின் நோட்டிபிகேஷனை mute செய்யும் வசதியும் வந்துள்ளது.

அதிலும் குறிப்பாக, செய்திகள் தானாக மறைந்து போவதற்கான disappearing message என்ற ஆப்சனின் பெயரை தற்போது “default message timer section” என்று மாற்றியுள்ளது. மேலும், ஸ்டேட்டசில் பகிரும் லிங்குகளின் preview ஐ காணும் வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags :