Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை கையகப்படுத்த பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனம் முடிவு

பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை கையகப்படுத்த பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனம் முடிவு

By: Nagaraj Mon, 01 May 2023 08:53:50 AM

பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை கையகப்படுத்த பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனம் முடிவு

கலிபோர்னியா: பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனம் முடிவு... திவாலாகும் நிலையில் உள்ள ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை கையகப்படுத்த அமெரிக்க அரசின் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அந்த வங்கியின் பங்குகள் கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது.

republic bank,govt,acquisition,joe biden govt,usa ,ரிபப்ளிக் வங்கி, அரசு, கையகப்படுத்தல், ஜோ பைடன் அரசு, அமெரிக்கா

கடந்த வெள்ளிக்கிழமையன்று 40% சரிந்ததன் மூலம், இந்தாண்டில் இதுவரை 97% சரிவடைந்து இருப்பதாக தெரிகிறது. இந்த வங்கியை மீட்க 11 மிகப்பெரிய கடன் நிறுவனங்கள் 30 பில்லியன் டாலர்களை வழங்கின. எனினும் வங்கி திவாலாவதை தவிர்க்க இயலவில்லை.

இதே போன்ற பொருளதார நெருக்கடியில் சிக்கிய சிலிக்கான் வேலி வங்கியை அண்மையில் ஜோ பைடன் அரசு கையகப்படுத்தியது.

இதனால் மற்றொரு வங்கியை உடனடியாக கையகப்படுத்த வேண்டாம் என்று அரசு தயங்கி வந்தது. எனினும் வேறு வழி இல்லாததால் ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி விரைவில் கையகப்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
|