Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசு ஊழியர்கள் கூகுள் டிரைவ், விபிஎன்,டிராப்பாக்ஸ் பயன்படுத்த தடை....மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் கூகுள் டிரைவ், விபிஎன்,டிராப்பாக்ஸ் பயன்படுத்த தடை....மத்திய அரசு அறிவிப்பு

By: vaithegi Sat, 18 June 2022 6:41:52 PM

மத்திய அரசு ஊழியர்கள் கூகுள் டிரைவ், விபிஎன்,டிராப்பாக்ஸ்  பயன்படுத்த தடை....மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா :வளர்ந்து வரும் தொழில்நுட்பமான இந்த உலகில் அனைத்து வேலைகளும் கண் இமைக்கும் நொடியில் செய்து முடிக்கப்படுகிறது. தற்போது அனைத்து அலுவலகங்கள், மருத்துவமனைகள் என எல்லா இடங்களிலும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போல, மத்திய மாநில அரசு அலுவலகங்களில் வேலை பளு மற்றும் கால விரயத்தை தவிர்க்கும் வகையில் அலுவலக வேலைகள் இணையதளம் வாயிலாக செய்யப்பட்டு வருகிறது. முக்கிய ஆவணங்கள் கணினியில் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் கூகுள் டிரைவ் பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

state government,offices,technology ,மாநில அரசு ,அலுவலகங்கள்,தொழில்நுட்பம்

இந்திய கம்ப்யூட்டர் ஏஜென்சிஸ் ரெஸ்பான்ஸ் குழு மற்றும் தேசிய புள்ளியியல் மையம் ஆகியவை இணைந்து செய்த பரிந்துரை காரணமாகவும் ஆவணங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சில ரகசிய ஆவணங்கள் வெளியில் கசியாமல் தடுக்கும் வகையில், விபிஎன், கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ் ஆகியவற்றில் தகவல்களை சேமிக்கவும் தடை விதித்துள்ளது.

state government,offices,technology ,மாநில அரசு ,அலுவலகங்கள்,தொழில்நுட்பம்

நாட்டிற்கு அச்சத்தை ஏற்படுத்த கூடிய, தீவிரவாதிகள் அதிகம் பயன்படுத்தும் விபிஎன் சேவை மிக ஆபத்தானது. அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் கண்டுபிடிப்பதும், அதை பின் தொடர்வதும் என்பது கடினம் அதனால் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது..

மேலும் மூன்றாவது நபர்கள் செயலிகள் மூலம் அரசு ஆவணங்களை ஸ்கேன் செய்ய கூடாது. முக்கிய தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மேற்கண்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆனால் ஊழியர்கள் தங்களுடைய சுய விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை சேமித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலக கணினிகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய மற்றும் ரகசியம் காக்கப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags :