Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லையில் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன்கள் வாங்க மத்திய அரசு முடிவு

எல்லையில் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன்கள் வாங்க மத்திய அரசு முடிவு

By: Nagaraj Tue, 14 July 2020 8:07:58 PM

எல்லையில் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன்கள் வாங்க மத்திய அரசு முடிவு

எல்லையில் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

லடாக்கின் கிழக்கே உள்ள கல்வான் பகுதியில் சீனாவுடன் எல்லை பிரச்னை காரணமாக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும் விதமாக ஹெரான் கண்காணிப்பு டுரோன்கள் மற்றும் டாங்கிகள் எதிர்ப்பு ஏவுகணைகளை, இஸ்ரேலில் இருந்து வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அவசரகால நிதியில் இருந்து அவை வாங்கப்பட உள்ளது.ஹெரான் வகை ட்ரோன்களை ஏற்கனவே, இந்தியா முப்படைகளின் பயன்படுத்தி வருகின்றன. லடாக் பகுதியில், விமானப்படை பயன்படுத்தி வருகிறது. விமானப்படையின் தேவையையும், பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு டுரோன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

missiles,drones,army,plan,frontier ,ஏவுகணைகள், ட்ரோன்கள், ராணுவம், திட்டம், எல்லை

இதனால், ஹெரான் டுரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. முப்படைகளில் பல ஆண்டுகள் பயன்பயன்படுத்தப்படும் இந்த டுரோன்கள், 2 நாட்கள் தொடர்ந்து 10 கி.மீ.,க்கு மேல் பறக்கும் திறன் பெற்றது. இந்த டுரோன்களில் ஆயுதங்களை சேர்க்கவும், பறக்கும் திறனை உயர்த்தும் ஆராய்ச்சியில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது.

அதேபோல், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டும் இந்த ஏவுகணைகள் வாங்கப்பட்டன. இதனிடையே, உள்நாட்டிலேயே டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிக்கும் முயற்சியில் டிஆர்டிஓ ஈடுபட்டுள்ளது.

Tags :
|
|
|