Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் - சென்னை ஐகோர்ட்

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் - சென்னை ஐகோர்ட்

By: Karunakaran Mon, 27 July 2020 1:43:33 PM

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் - சென்னை ஐகோர்ட்

தமிழகத்தில் உள்ள மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரந்தன. இதுதொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் என தெரிவித்தது.

chennai icourt,federal government,backward classes,medical course ,சென்னை ஐகோர்ட், மத்திய அரசு, பின்தங்கிய வகுப்புகள், மருத்துவ படிப்பு

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறினர்.

மேலும் நீதிபதிகள், ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்ற மருத்துவ கவுன்சில் விளக்கத்தை ஏற்க முடியாது. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு அளித்தனர்.


Tags :