Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது - இஸ்ரோ சிவன்

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது - இஸ்ரோ சிவன்

By: Karunakaran Thu, 25 June 2020 5:08:32 PM

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது - இஸ்ரோ சிவன்

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின்படி, விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு குறித்து பெங்களூருவில் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்தபோது கூறியுள்ளார்.

பெங்களூருவில் அவர் பேட்டி அளித்தபோது, விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இந்த சீர்திருத்தங்கள் உற்சாகம் அளிக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பெற நமது இளைஞர்கள் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

isro shivan,federal government,space sector,private participate ,விண்வெளித் துறை,இஸ்ரோ சிவன்,மத்திய அரசு, தனியார் பங்களிப்பு

மேலும் அவர், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏற்கனவே முன்வந்துள்ளதாகவும், உலக விண்வெளி பொருளாதாரத்திற்கான ஒரு முக்கிய மையமாக இந்தியா உருவாகும் என்று உறுதியாக நம்புகிறோம் எனவும் கூறியுள்ளார்.

விண்வெளி நடவடிக்கைகளை தனியார் நிறுவனங்கள் முன்வந்து மேற்கொண்டு இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக மாற்ற வேண்டும் என்றும், இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை ஒரு புதிய விண்வெளி சகாப்தமாக மாற்றும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

Tags :