Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு

மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு

By: vaithegi Sat, 30 Sept 2023 5:28:21 PM

மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு


கேரளா: கேரளாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் கடந்த 2020 – 2021 ஆம் கல்வியாண்டில் திருத்தியமைக்கப்பட்டது.

இந்நிலையில் NEET PG படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெற்று வரும் வேளையில் மீண்டும் MBBS மற்றும் முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கான ஆண்டு கட்டணத்தை அரசு அதிகரித்து உள்ளது. தற்போது திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விவரங்கள் பற்றி அறிக்கை வெளியாகிவுள்ளது.

fee,medical college ,கட்டணம் ,மருத்துவக் கல்லூரி


அதில் MBBS படிப்புகளுக்கு கட்டணம் 27,550 -ல் இருந்து 28,950 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.அடுத்ததாக BDS படிப்புகளுக்கு 25,380 -ல் இருந்து கட்டணம் 26, 640 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக B.SC Nursing படிப்பிற்கு 22,70 – லிருந்து 23,170 ஆக கட்டணம் உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் இட ஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் கல்லூரியில் சேரும்போது கட்டணத்தை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :
|