Advertisement

தமிழகத்தில் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள்

By: vaithegi Sat, 30 Sept 2023 4:24:37 PM

தமிழகத்தில் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள்

சென்னை: பல மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால், 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாக, பொது சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியீடு .. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக சாலைகளில் தேங்கும் மழை நீரில் டெங்கு கொசு அதிகம் உற்பத்தி ஆகிறது. அதனால் டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது.

internment camps,fever ,தடுப்பு முகாம்கள் ,காய்ச்சல்

எனவே இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

எனவே இம்முகாம் தினசரி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்து சாப்பிட கூடாது எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.


Tags :