Advertisement

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவு

By: vaithegi Wed, 16 Nov 2022 12:42:37 PM

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவு

புதுடெல்லி: சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

corona,india ,கொரோனா , இந்தியா

இதையடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 501 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

எனவே அதன்படி, இந்தியவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 501 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7,561 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 98.79 சதவிகிதமாக உள்ளது. மேலும் நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 219.82 கோடி டோஸ்கள் ஆகும் என தெரிவித்துள்ளது.

Tags :
|