Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 15, 16ல் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுக் கூட்டம்; சேலத்திற்கு முதல்வர் வருகை

வரும் 15, 16ல் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுக் கூட்டம்; சேலத்திற்கு முதல்வர் வருகை

By: Nagaraj Wed, 08 Feb 2023 11:51:51 AM

வரும் 15, 16ல் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுக் கூட்டம்; சேலத்திற்கு முதல்வர் வருகை

சேலம்: வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுக் கூட்டம், வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் சேலத்தில் நடக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தமிழகம் முழுவதும் அனைத்து துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுக் கூட்டம், வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் சேலத்தில் நடக்கிறது.

chief minister,district planning works,inspection,m k stalin,salem , ஆய்வு, சேலம், மாவட்ட திட்ட பணிகள், மு.க.ஸ்டாலின், முதல் அமைச்சர்

இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, திட்டப்பணிகள் செயல்படுபத்தப்படுவது குறித்து துறை வாரியாக ஆய்வு செய்கி்றார். கூட்டத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் ஆலோசனை நடத்துவதற்காக, கடந்த 2021-22ம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே இந்த விவரங்களை சேகரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags :