Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே நடைபெற்ற சண்டை தற்காலிகமாக நிறுத்தம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே நடைபெற்ற சண்டை தற்காலிகமாக நிறுத்தம்

By: Karunakaran Tue, 01 Sept 2020 7:06:51 PM

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே நடைபெற்ற சண்டை தற்காலிகமாக நிறுத்தம்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நடந்து வருகின்றன. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ள காசாமுனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இஸ்ரேல் நாட்டின்மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம்.

ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுக்கும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காசா முனை பகுதியில் இருந்து வெடிக்கக்கூடிய எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்களை இஸ்ரேல் வான்வெளிக்குள் பறக்கவிட்டு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வந்தனர். இரவு நேரங்களில் காசாவில் இருந்து பறக்கவிடப்படும் எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்கள் இஸ்ரேல் நாட்டு மக்களின் வீடுகளில் விழுந்து தீவிபத்துக்களை ஏற்படுத்தின.

israel,hamas militants,suspended,fight ,இஸ்ரேல், ஹமாஸ் போராளிகள், இடைநீக்கம், சண்டை

எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்கள் விபத்தில் பல வீடுகள் தீக்கிரையானது. இந்த தாக்குதல்களால் 300-க்கும் அதிகமான தீவிபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், பல ராக்கெட் தாக்குதல்களும் மீது ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேல் மீது ஏவப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலாக காசா முனை பகுதி மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நடத்தி காசா பகுதியை சேதப்படுத்தியது.

இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கைகளால் காசா முனை பகுதியில் பெரும் பிரச்சனைகள் உருவானது. இதனால் இஸ்ரேலுடன் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள ஹமாஸ் முயற்சி மேற்கொண்டு, இரு தரப்பிற்கு இடையேயான பேச்சுவார்த்தையில் கத்தார் நாடு மத்தியஸ்தம் செய்தது. இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டதையடுத்து 3 வாரங்களாக நடைபெற்றுவந்த தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை நிறுத்தத்திற்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.




Tags :
|