Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது - டிரம்ப்

இந்தியாவில் கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது - டிரம்ப்

By: Karunakaran Wed, 05 Aug 2020 12:05:03 PM

இந்தியாவில் கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது - டிரம்ப்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளுவதில் தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தற்போது உலகின் மிகப்பெரிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா இந்த வைரசை எதிர்த்துப் போராடுவதில் மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

corona virus,india,biggest problem,trump ,கொரோனா வைரஸ், இந்தியா, மிகப்பெரிய பிரச்சனை, டிரம்ப்

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் இதுகுறித்து பேட்டி அளித்தபோது, கொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். இந்தியா மற்றும் சீனாவைவிட நாங்கள் பெரியவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அவர், மற்ற நாடுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. அமெரிக்காவில் இதுவரை 6 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேறு எந்த நாடும் இதை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பாதிப்பு, பலி மற்றும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் என அனைத்து பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|