Advertisement

தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் தாக்கல்

By: Nagaraj Wed, 13 July 2022 10:38:46 PM

தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் தாக்கல்

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான ஆவணங்களை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தாக்கல் செய்தார்.

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் பெரிதாகி அது கலவரமானது. இந்த நிலையில் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டர். பொருளாளராக இருந்த ஓபிஎஸ் பணி நீக்கம் செய்யப்பட்டார், அவருக்கு பதிலாக திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொதுச்செய்லாளர் பதவி கொடுக்கப்பட்டது.

majority,general assembly,audio matter,opinion,must prove ,பெரும்பான்மை, பொதுக்குழு, ஆடியோ விவகாரம், கருத்து, நிரூபிக்க வேண்டும்

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான ஆவணங்களை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தாக்கல் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி சண்முகம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளோம்.


பெரும்பான்மையை பொதுக்குழுவில் நிரூபிக்க வேண்டும் என நீதிமன்றமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆடியோ விவகாரத்தில் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை எனக் கூறினார்.

Tags :