Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு

By: Nagaraj Tue, 28 Mar 2023 10:24:47 PM

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு

புதுடெல்லி: உக்ரைனில் படித்து, இந்தியாவில் உள்ள எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேராத மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் மருத்துவ படிப்பை தொடர சென்ற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போர் காரணமாக தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனில் இருந்து திரும்பும் இந்திய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை முடிக்க அனுமதி கோரி வருகின்றனர். இந்நிலையில் நாடு திரும்பிய மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், உக்ரைனில் இருந்து திரும்பும் இந்திய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது என்றும், அவர்கள் சொந்த நாட்டிலேயே கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.

final chance,india,medical,students,ukraine , இந்தியா, இறுதி வாய்ப்பு, உக்ரைன், மருத்துவம், மாணவர்கள்

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர முடியாது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உக்ரைனில் படித்து, இந்தியாவில் உள்ள எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேராத மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது, உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள், இந்தியாவிலேயே பார்ட் 1 மற்றும் 2 தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதுவதற்குக் கூட அரசுத் துறையில் 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்றும், இந்திய மருத்துவப் பாடத்திட்டத்தின்படிதான் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags :
|