Advertisement

மகளிர் உரிமைத்தொகை .. இன்று இறுதிகட்ட ஆலோசனை

By: vaithegi Tue, 12 Sept 2023 3:56:26 PM

மகளிர் உரிமைத்தொகை ..  இன்று இறுதிகட்ட ஆலோசனை


சென்னை: தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற செப்.15 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று இறுதி ஆலோசனை ...தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் செப். 15 ஆம் தேதி முதல் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து இந்த திட்டம் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். அந்த வகையில் இந்த திட்டத்திற்கு அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. இத்திட்டம் சரியாக செயல்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

counseling,womens rights fund ,ஆலோசனை,மகளிர் உரிமைத்தொகை

எனவே விண்ணப்பித்த பெண்களில் தகுதி உடையவர்களை தேர்வு செய்து இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.12) இறுதி கட்ட ஆலோசனை நடத்த இருக்கிறார்.

மேலும் இதில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறை உள்பட பல்வேறு விவகாரங்கள் பற்றி முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :