Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 கட்டங்களாக ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 கட்டங்களாக ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு

By: Monisha Fri, 18 Sept 2020 09:56:49 AM

அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 கட்டங்களாக ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனை சேர்ந்த கல்லூரிகளில் படித்து வரும் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான மாதிரி தேர்வு நாளை, 20 (நாளை மறுதினம்) மற்றும் 21-ந்தேதிகளில் (திங்கட்கிழமை) நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்துவதால் கிராமப்புற மாணவர்கள் எப்படி எழுதுவார்கள்? என்று பேசப்பட்டது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இதுபற்றி ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வெளியான தகவல் வருமாறு:-

anna university,colleges,final semester exam,online,students ,அண்ணா பல்கலைக்கழகம்,கல்லூரிகள்,இறுதி செமஸ்டர் தேர்வு,ஆன்லைன்,மாணவர்கள்

இறுதி செமஸ்டர் தேர்வை எழுதும் மாணவர்கள் அனைவரிடமும் ஆன்ட்ராய்டு செல்போன் வசதி இருக்கிறது. இதனால் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு எந்த சிக்கலும் இல்லை என்றுதெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஒரு மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் இந்த தேர்வு கொள்குறி வகை வினாக்களாக தான் இருக்கும் என்பதால் ஆன்ட்ராய்டு செல்போனில் எளிதாக மாணவர்கள் பதில் அளித்துவிடுவார்கள்.

24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும் இந்த தேர்வு காலை காலை 10 மணி முதல் 11 மணி வரை, பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை என 4 கட்டங்களாக நடக்கிறது.

Tags :
|