Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆண்டுக்கு ₹7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு அரசு வருமான வரி விலக்கு .. நிதியமைச்சர் விளக்கம்

ஆண்டுக்கு ₹7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு அரசு வருமான வரி விலக்கு .. நிதியமைச்சர் விளக்கம்

By: vaithegi Sun, 16 July 2023 10:12:10 AM

ஆண்டுக்கு ₹7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு அரசு வருமான வரி விலக்கு  ..  நிதியமைச்சர் விளக்கம்

இந்தியா: ₹7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விலக்கு .... இந்தியாவில் 2023-24 -ம் நிதியாண்டில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ. 7 லட்சம் வரை வருமானம் ஈடுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இது குறித்து பல சந்தேகங்கள் வந்த நிலையில் அது பற்றி நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து அதில், நாங்கள் ஒரு குழுவாக அமர்ந்து, நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் எந்த கட்டத்தில் வரி செலுத்துகிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க விவரங்களை திரட்டினோம். அதில் ₹7.27 லட்சத்திற்கு, நீங்கள் எந்த வித வரியும் செலுத்த மாட்டீர்கள். இப்போது. ₹27,000 தான் பிரேக்-ஈவன் வருகிறது. அதன் பிறகு நீங்கள் வரி செலுத்தத் தொடங்குவீர்கள் என்று தெரிவித்தார்.

finance minister,govt,income tax exemption ,நிதியமைச்சர் ,அரசு ,வருமான வரி விலக்கு

மேலும் 013-14 நிதியாண்டில் ₹3,185 கோடியுடன் ஒப்பிடும் போது, 2023-24 -ம் ஆண்டிற்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் பட்ஜெட் ₹22,138 கோடியாக அதிகரித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை’ முயற்சியின் விளைவாக, 158 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த கொள்முதல், 33 சதவீதம் MSME-களிலிருந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் 2014-ல் 142-ல் இருந்து 2019-ல் 63-வது இடத்திற்கு, தொழில் செய்ய எளிதான குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை மேம்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Tags :
|