Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆடியோ சர்ச்சை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

ஆடியோ சர்ச்சை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

By: Nagaraj Sun, 23 Apr 2023 6:55:12 PM

ஆடியோ சர்ச்சை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: ஆடியோ சர்ச்சை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் உள்ளார். கருத்துகளை புள்ளிவிவரங்களுடன் துல்லியமாக பேசுவதன் மூலம் பெயர் பெற்றவர். அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர்கருத்து கொண்டவர்களை விமர்சிக்கிறார் என்று விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 விநாடிகள் கொண்ட ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில், ‘உதயநிதி, சபரீசன் சொத்துகள் குறித்து பேசியது போல இருந்தது. அந்த ஆடியோவை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அக்கட்சி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் பகிர்ந்திருந்தனர்.

audio,controversy,explanation,minister,palanivel thiagarajan, ,அமைச்சர், ஆடியோ, சர்ச்சை, பழனிவேல் தியாகராஜன், விளக்கம்

இதுகுறித்து தி.மு.க விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், ஆடியோ விவகாரம் குறித்து பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆடியோ எளிதாக கிடைக்கும் நவீன தொழில்நுட்பம் மூலம் இட்டுக்கட்டப்பட்டது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இனிவரும் காலங்களில் ஆடியோ, வீடியோக்கள் வெளியாவதில் ஆச்சரியமில்லை.

எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் பேச்சு சுதந்திரம் அவசியம் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன். என் மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிராக நான் இதுவரை போலீஸ் வழக்கு பதிவு செய்யவில்லை. ஒரே ஒரு முறை என் முன்னோர்களை தவறாக சித்தரித்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ மீது வழக்கு போட்டேன். கடந்த இரண்டு வருடங்களில் என் மீது நிறைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சிறிய குற்றச்சாட்டுகள் முதல் பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு நான் ஒருபோதும் எதிர் வினையாற்ற வில்லை. பொதுத்தளங்களில் கிடைக்கும் தொழில்நுட்பங்கள், அந்த ஆடியோ க்ளிப் நம்பகத்தன்மை கொண்டது அல்ல என்று தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது. தற்போது கிடைக்கும் எளிய தொழில்நுட்பத்தின் மூலம் இதுபோன்ற ஆடியோ, வீடியோ வெளியானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|