Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வரை திடீரென சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

முதல்வரை திடீரென சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

By: Nagaraj Tue, 02 May 2023 09:03:48 AM

முதல்வரை திடீரென சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திடீரென்று சந்தித்துப் பேசி உள்ளார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியானது. எனினும் அது போலியானது என நிதியமைச்சர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மற்றொரு ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன், ஆடியோவில் உள்ளபடி யாரிடமும் பேசவில்லை என தெரிவித்திருந்தார்.

chief minister,m k stalin,meeting,pdr,sudden ,, சந்திப்பு, திடீர், பிடிஆர், மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்

மேலும் பல பிரபலங்கள் பேசாததை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில், அவரை திடீரென சந்தித்து பேசினார்.

சுமார் 10 நிமிடமே இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் நிதி அமைச்சரை, முதலமைச்சர் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags :
|