Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் .. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் .. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

By: vaithegi Mon, 20 Mar 2023 3:32:56 PM

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும்  ..  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: சென்னையை தொடர்ந்து, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு .. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று கொண்டு வருகிறது.

இதனை தூது இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.இதில், மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டம், காலை உணவு திட்டம் , சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம்,

finance minister,madurai,coimbatore ,நிதியமைச்சர் ,மதுரை, கோவை

அதைத்தொடர்ந்து மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் உதவி, பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு திட்டம், ராணுவ வீர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு என்று பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் நிதியமைச்சர் அறிவித்து வருகிறார்.

அதேபோன்று, சென்னையை தொடர்ந்து, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

இதில் கோவையில் ரூ.9,000 கோடி ருபாய் செலவிலும், மதுரையில் 8,500 கோடி ருபாய் செலவிலும் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

Tags :