Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி

By: Nagaraj Fri, 30 Dec 2022 10:29:03 PM

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி

நெல்லூர்: தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் மத்தியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இறந்தவர்களுக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இந்நிலையில் கந்துகுருவில் என்டிஆர் சர்க்கிள் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றார். சந்திரபாபு நாயுடுவின் பேச்சைக் கேட்க ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

இதற்கிடையில் சந்திரபாபுவின் வாகனத்திற்குப் பின்னால் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் பொதுக்கூட்ட மேடை அருகே வாகனங்கள் நிறுத்தும் பகுதியை நோக்கி மெதுவாக நகர்ந்தன. ஆனால் அதே இடத்தில் சாலையின் இருபுறமும் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

congestion,pushing,funding,ex-chief minister,vehicles,incident ,நெரிசல், தள்ளுமுள்ளு, நிதியுதவி, முன்னாள் முதல்வர், வாகனங்கள், சம்பவம்

கூட்டத்தில் மூச்சுத் திணறி 2 பெண்கள் உட்பட 8 தொண்டர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 5 பேர், நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடந்ததால், பொதுக்கூட்டத்தை சந்திரபாபு உடனடியாக ரத்து செய்தார்.


மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், விபத்தில் உயிரிழந்த தன்னார்வலர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் சில உறுப்பினர்கள் தங்கள் சொந்த நிதியில் இருந்து தலா ரூ. 10 லட்சம் அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். ஆந்திர அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் அறிவிக்கப்பட்டது.

Tags :