Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொது இடங்களில் எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் - அரியானா உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

பொது இடங்களில் எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் - அரியானா உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

By: Monisha Thu, 28 May 2020 10:15:04 AM

பொது இடங்களில் எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் - அரியானா உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கவலை அளிப்பதாக உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 4-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

india,corona virus,mask,social space,fine rs. 500,haryana state ,இந்தியா,கொரோனா வைரஸ்,முகக்கவசம்,சமூக இடைவெளி,ரூ.500 அபராதம்,அரியானா மாநிலம்

மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அரியானா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கோருகியில், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் அதேபோல், பொது இடங்களில் எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
|
|