Advertisement

நேட்டோவில் 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைகிறது

By: Nagaraj Wed, 05 Apr 2023 09:14:52 AM

நேட்டோவில் 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைகிறது

ஹெல்சின்கி: நேட்டோவில் 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இணையவுள்ளது. ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து நேட்டோவில் இணைய உள்ளது.

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உள்பட 30 நாடுகள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா தாக்கினால் அது 3வது உலகப்போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைய உள்ளது.

finland,nato,neighboring countries,russia, ,அண்டை நாடு, நேட்டோ, பின்லாந்து, ரஷியா

நேட்டோவில் 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இணையவுள்ளது. ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து நேட்டோவில் இணைய உள்ளது. நேட்டோவில் பின்லாந்தின் இணைவு நாட்டில் நேட்டோ படைகள் குவிவதற்கு காரணமாக இருக்கலாம். இது ரஷ்யாவிற்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் உக்ரைன் மீதான போரை அதிகரிக்க வழிவகுக்கும்.

பின்லாந்து போலவே ஸ்வீடனும் நேட்டோவில் சேர விண்ணப்பித்துள்ளது. ஸ்வீடனின் விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் இருக்கும்போது, ஃபின்லாந்து நாளை நேட்டோவில் சேர உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்த சம்பவம் உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|