Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊட்டி மார்க்கெட்டில் தீ விபத்து: ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

ஊட்டி மார்க்கெட்டில் தீ விபத்து: ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

By: Monisha Wed, 24 June 2020 1:08:23 PM

ஊட்டி மார்க்கெட்டில் தீ விபத்து: ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் காய்கறி மண்டிகள் அருகே ஒரு சிறிய ஓட்டல் கடை இருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதால், சுழற்சி முறையில் கடைகள் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில், அங்குள்ள ஒரு ஓட்டலில் பயங்கர சத்தம் கேட்டது. தொடர்ந்து கடையில் தீப்பிடித்து எரிந்தது. நேரம் செல்ல செல்ல தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அருகில் இருந்த பிற கடைகளுக்கும் தீ பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது.

fire,ooty,market,gas cylinder,damage ,தீ விபத்து,ஊட்டி,மார்க்கெட்,கியாஸ் சிலிண்டர்,சேதம்

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, லாரியில் இருந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி நேற்று அதிகாலை 5 மணியளவில் தீயை அணைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால், தீப்பிடித்தது தெரியவந்தது. இந்த பயங்கர தீ விபத்தில் காய்கறி, மளிகை, ஓட்டல்கள் என 81 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளது.

Tags :
|
|
|