Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு .. பட்டாசுக்கு பயன்படுத்த தடை

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு .. பட்டாசுக்கு பயன்படுத்த தடை

By: vaithegi Wed, 07 Sept 2022 4:50:01 PM

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு  ..   பட்டாசுக்கு பயன்படுத்த தடை

டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சனையாக உள்ளது.இதை அடுத்து காற்று மாசுபட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாச கோளாறு மற்றும் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2020ம் ஆண்டில், கொரோனா ஊரடங்கு காலத்தில் டெல்லியில் நிலவிய காற்று மாசுபாட்டால் 57,000 பேர் உயிரிழந்ததாக ஆய்வு தகவல்கள் கூறுகிறது. எனவே அதனால் டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்ததை விட காற்றில் உள்ள பி எம் 2.5 செறிவு அதிகமாக உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. இக்காற்று மாசுபாட்டுக்கு இயற்கையாகவும் செயற்கையாகவும் பல காரணங்கள் உள்ளது.

fireworks,delhi,air pollution , பட்டாசு,டெல்லி,காற்று மாசுபாடு

இதைதொடர்ந்து அதில் ஒன்று பட்டாசு வெடித்தல். மருந்து பொருட்களால் செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் புகையால் காற்றின் தரநிலை மோசமாகிறது. அதனால் டெல்லி அரசு பட்டாசு வெடிக்க தடை விதித்தது. குறிப்பாக மக்கள் தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவு பட்டாசுகளை வெடிப்பர்.

டெல்லி அரசு கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்தது. அதே போன்று இந்த ஆண்டும் டெல்லியில் பட்டாசுகளை விற்பனை செய்யவும், அதை வெடிக்கவும் டெல்லி அரசு 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை தடை விதித்துள்ளது. அடுத்த மாதம் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு பட்டாசு விற்பனையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|