Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளியை முன்னிட்டு சேலத்தில் பட்டாசு கடைகள் உரிமம் பெற இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தீபாவளியை முன்னிட்டு சேலத்தில் பட்டாசு கடைகள் உரிமம் பெற இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Thu, 31 Aug 2023 2:49:25 PM

தீபாவளியை முன்னிட்டு சேலத்தில் பட்டாசு கடைகள் உரிமம் பெற இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சேலம் : செப். 1 ஆம் தேதி முதல் செப்.15 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் ... தமிழகத்தில் தீபாவளி பண்டிகை மக்களால் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே நினைவிற்கு வருவது பட்டாசு தான்.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெறுவது பற்றி சேலம் காவல் ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

diwali,crackers shops ,தீபாவளி, பட்டாசு கடைகள்

இதையடுத்து அதன் படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பட்டாசு கடைக்கான உரிமம் பெற வருகிற செப். 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப். 1 ஆம் தேதி முதல் செப்.15 ஆம் தேதி மாலை 5 மணி வரை உரிய ஆவணங்களோடு விண்ணப்பிக்க வேண்டும் என்று வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் அது மட்டுமில்லாமல் பட்டாசு கடைகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி இருக்கிறது .

Tags :
|